#HearMeOut
Skip Navigation Links
Home
Profile
Latest
Search
Social Media
Guide
30 Aug 2023
(262 Views)
[x]
Presidential Elec 2023 - T
TKL 1st TV broadcast - Tamil
நான் மக்களுக்கு அரசாங்கம் சாராத சுயட்சையான அதிபர் ஒருவரை தேர்வு செய்யும் வாய்ப்பை வழங்கும் நோக்கோடு வரும் தேர்தலில் பங்கேற்கின்றேன்.
அதிபர் இரண்டு முக்கிய கடமைகளை, அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளது போல் மேற்கொள்ள வேண்டும். அவை, முந்நாள் இருப்பை பாதுகாப்பதும் நமது பொது சேவையின் கண்ணியத்தை காப்பதும்.
நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், நான் அந்த கடமைகளை தொய்வின்றியும், நேர்மையாகவும் என்னால் முடிந்தவரை சிறப்பாகவும் செய்வேன்.
இப்போது நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் எப்படி இந்த இரண்டு கடமைகளை நிறைவேற்றுவேன் என கூறுகின்றேன்.
என் முதல் கடமையை பற்றி கூறுகின்றேன். நமது முந்நாள் இருப்பு மிக அதிகமான பொருள் வளம் கொண்டது, பல நூறு பில்லியன் கணக்கில் அல்லது அதற்கு மேலும் இருக்கலாம். இவை நேர்த்தியாக முதலீடு செய்யப்பட்டு, மக்களுக்கு நல்ல பலனை நெடுநாளைக்கு, ஐந்தாண்டுகள் அல்லது அதற்கும் மேற்பட்ட வகையிலும், அதிக அபாய நிலைகளை கொண்டிராமலும் அமைதல் வேண்டும்.
நான் அந்த முதலீட்டு யுக்திகளை தொழில்முறை முதலீட்டு வல்லுனர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து, அவர்கள் ஆக சிறந்த முறையில் நோக்கம் நிறைவேற்றும்படி செய்வேன்.
அவர்களை கண்காணிப்பதற்கு ஒரு இயக்குனர் குழு, எனது வழிகாட்டுதலில் பொருத்தமான அணுகுமுறைக்கு ஏற்ப செயல்படும்.
முந்நாள் இருப்ப முறையாக முதலீடு செய்யப்படுவதை உறுதி செய்வதோடு, நான் அரசாங்கத்தோடு செயல்பட்டு இக்கால மற்றும் வருங்கால சந்ததியினர் பலன் காணும் வகையில் திறன்பட நிர்வாகம் செய்யப்படும்.
இப்போது எனது இரண்டாவது கடமை. பொதுச் சேவையின் உயர்நிலையில் பொருத்தமான நபர்கள் சேவையாற்றுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். நமது கல்விமான்கள் திறம்பட செயல்படுவதை மதிக்கும் அதே நேரத்தில், பல நாட்களாக சேவையாற்றி வந்தோரின் அனுபவத்தையும் நாம் மதிக்க வேண்டும்.
நமக்கு பலதரப்பட்டோர் தேவைப்படுகின்றனர், திறனாளிகளும் அனுபவமிக்கோரும் சேர்ந்த நல்ல குழுவாக அமைதல். பல நாட்களாக சேவை புரிந்த அனுபவமிக்கோரும் தலைமைத்துவ நிலைக்கு உயர்வதை காண விரும்புகிறேன்.
நான் இவ்வகையான அம்சங்கள் கருத்தில் கொண்டு மக்கள் நமது பொதுச் சேவையில் உயர்ந்த நிலைக்கு பரிந்துரைக்கப்படுவதை விரும்புகிறேன்.
எனது என்.டி.யு.சியின் தலைமை நிர்வாகி நெருப்பின் 30 ஆண்டு கால அறிதலும் அனுபவமும், நான் நன்கு செயல்பட எனக்கு உதவும் என்று நான் நம்புகிறேன்.
அரசியல்சட்ட கடமைகள் தவிர்த்து, எனக்கு ஓர் எண்ணமும் உண்டு, அதிபர் அலுவலகம் வழி மக்களின் வாழ்க்கையை மூன்று வழிகளில் மேன்மை அடைய செய்ய வேண்டும் என்பது. அவை வாழ்க்கை செலவீனத்தை மிதமாக்குதல், வீட்டுமையை கட்டுப்படியான நிலையில் வைத்தல், மக்களுக்கு போதுமான வேலை வாய்ப்புகள் அமையும்படி செய்து முன்னேற வழி வகுத்தல்.
இப்போது நான் ஒன்றை தெளிவு படுத்தியாகவும் வேண்டும். நான் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தோடு எதிர்ப்பு மனப்பான்மையோடு செயல்படும் நோக்கம் கொண்டிருக்கவில்லை. மாறாக புரிந்துணர்வோடு முன் கூறிய நோக்கங்களுக்காக செயல்படுவேன்.
எனது எதிர்கால நோக்கம், மக்கள் ஒற்றுமையாக அமைதியாக வாழ நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே. மக்கள் தங்கள் பொருளாதார நலன்கள் பாதுகாக்கப்பட்டால், அவர்களின் உடனடி தேவைகளுக்கு அப்பால், சமூக நலனிலும் அக்கரை கொள்வார்கள் என நம்புகிறேன். இதுவே 50 ஆண்டுகளாக மக்கள் கொண்டுள்ள ஒற்றுமையானதும் பெருமைக்குரியதுமான பண்பு. அதை மீண்டும் உருவாக்குவோம்.
நான் ஓர் எளிய பிண்ணனியை கொண்டவன். எனது 75 ஆண்டு வாழ்க்கையில் எளிய மக்களோடு தொடர்பு கொண்டு இருந்தேன். அதனால் அவர்களுடைய துன்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் நான் அறிவேன். நான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் எனது அதே நிலையை தொடர நோக்கம் கொண்டுள்ளேன். அந்நிலையில் எனது அலுவல்களை என்னால் சிறப்பாக செய்ய முடியும் என நான் நம்புகிறேன்.
எனவே அதற்கேற்ப மக்களிடம் எனக்கு வலுவான ஆதரவை தரும்படி கேட்கிறேன். அதன்வழி அரசாங்கத்தோடு ஒன்றாக செயல்பட்டு எதிர்கால சவால்களை சந்திக்க முற்படுகிறேன்.
டான் கின் லியான்
View PDF
Add Comment
Add a comment
Email
Comment
QR Code